https://www.PrimeItHead.com
https://www.PrimeItHead.com
நாம் புதிதாக ஒரு மொபைல் Mobile வாங்குவதற்கு முன்னர் அது பற்றிய தேடல்களை மேற்கொண்டிருப்போம். அதாகப்பட்டது சமூக வலைத்தளங்கள் எல்லாவற்றிலும் தேடு தேடு என்று தேடி ஒரு முடிவுக்கு வந்திருப்போம். அங்கே சில வேளைகளில் முடிவுகள் எட்டப்படாமலும் போகலாம். இவையனைத்தையும் சிலர் எமக்கு விளாவாரியாகத் தந்திருப்பார்கள்.
நாம் வாங்க வேண்டிய மொபைலின் நன்மை தீமை என கொடுக்கும் காசுக்கு பெறுமதியானதா இல்லையா. அதன் Camera , Processor and Ram என அனைத்தையும் விளாவாரியாக விவரித்திருப்பார்கள். So எமக்கு இலகுவாக இருக்கும் எந்த மொபைல் வாங்கலாம் என்று. Actually இதைத்தான் Feasibility Study என்பார்கள்.
அவர்கள் அனைவரும்விளங்கப்படுத்தும் போது சில Technical Terms நமக்கு பயன்படுத்தி சொல்லியிருப்பார்கள். அவை நமக்கு சில வேளைகளில் புரியாமல் போய் இருக்கும் சிலவேளை புரிந்திருக்கலாம். இருந்தாலும் சிறிய கருத்துசிதறல்களும் இருக்கலாம். அப்படியான ஒரு Technical Term பற்றித்தான் இன்று உங்களுக்கு தெளிவு படுத்தலாம் என்று நினைக்கின்றேன்.IP68 and IP69 What Do These Mobile Ratings Mean?
Ingress Protection (IP) இதுதான் அதன் அர்த்தம் ஆகும். Actually ஏதாவது ஒரு Electrical Device ன் உறைகளால் அந்த சாதனத்திற்கு திடப்பொருள் Solid and Liquid – திரவங்களின் ஊடுருவலுக்கு எதிராக வழங்கப்படும் பாதுகாப்பாகும். So எமது Electrical Device ஆன Mobiles பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒரு பதுகாப்புத்திறன் என்றும் சொல்லலாம்.
என்பன இரண்டு வகையான பாதுகாப்பு குறியீட்டு இலக்கங்கள் ஆகும். ip68 and also ip69 இவை இரண்டும் மிகவும் பிரபல்யமானவை தற்போதைய தயாரிப்புக்களில். இவற்றை இனங்கண்டுதான் மக்கள் வாங்கலாமா இல்லையா என முடிவெடுக்கின்றார்கள். So விற்பனையை அதிகரிக்க இவை போன்ற பல மாற்றங்களை செய்து மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான நிஜம்.
IEC அதாவது – International Electrotechnical Commission இவர்கள் தான் இந்த குறியீட்டை வழங்குகின்றார்கள்.
Actually IEC 60529 என்ற கட்டுப்பாட்டின் கீழ் இவையனைத்தும் நிர்வகிக்கப்படுகின்றது. and also முக்கியமாக இரண்டு இலக்கங்கள் இங்கே காணப்படுகின்றது 6 and 9 or 6 and 8. இதை வைத்துத்தான் இது என்ன வகையான பாதுகாப்பை நமது Mobile வழங்கும் என்பதை இலகுவாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ளக் கூடியவாறு இருக்கும்.
நாம் IP68 ஐ எடுத்துக் கொண்டால் முதல் இலக்கமான 6 என்பது தூசுகளுக்கெதிரான உச்ச பாதுகாப்பைக் காட்டுகின்றது. அத்துடன் இரண்டாவது இலக்கமான 8 என்பது நீர் பாதுகாப்பைக் காட்டுகின்றது. ஆனால் உச்ச பாதுகாப்பு இல்லை அதை விட சற்றுக் குறைவு. ஆனாலும் 8 என்பது எமது Mobile ஆனது 1 மீட்டர் அளவுள்ள நீருக்கடியில் மாட்டினாலும் நீரை உள்ளே செல்ல விடாமல் பாதுகாக்கும்.
IP68 30 நிமிடம் அல்லது அதற்கு மேல் நீர் உட் செல்லாமல் பாதுகாப்பு வழங்கும்.also இவை உச்ச அழுத்தம் high Pressure and உயர் வெப்ப நீருக்கெதிராக High Temperature தாக்குப்பிடிக்காது. என்பதை நினைவில் கொள்ள வேண்டும். But IP69 குறியீட்டைக் கொண்டிருந்தால் தூசிக்கெதிரான அதிக பாதுகாப்பைக் கொடுக்கும் என்பதுடன் ஒரு Water Jet இயந்திரத்தினால் 80 தொடக்கம் 100 பார் அழுத்த்தையும் தாங்கக்கூடியது. அத்துடன் 80 வெப்பநிலையையும் தாங்கக்கூடியவாறு படைக்ப்படும்.
ஆகவே உங்களது Mobile எதைக் கொண்டுள்ளது என்பதை தெளிவாக உங்களால் அவதானிக்கக்கூடியவாறு இருக்கும். இவ்வகையான வேறு பாடுகளால் அவற்றிற்கிடையே கணிசமான விலை வேறுபாடுகளும் காணப்படும். நாம் வாங்கும் போது இவற்றையெல்லாம் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். சில Mobile களிடையே மற்றைய எல்லா விவரங்களும் ஒரே போல் இருக்கும் but இந்த 68 & 69 வேறுபாடு காணப்படும். இவற்றை நாம் தான் கவனம் செலுத்தி வாங்கிக் கொள்ள வேண்டும்.
நாம் தண்ணீர் தூசுப்பக்கம் போவதில்லை ஆகவே அவற்றைப்பற்றி கவலையில்லை என்றால் IP68 பக்கம் போகலாம் . ஆனால் இவையெல்லாம் கட்டாயம் நான் வாழ்கையில் ஒவ்வொரு நாளும் சந்திப்பேன் என்றால் நீங்கள் IP69 பக்கம் போவதுததான் சாலச் சிறந்தது.
அப்படியே மற்றைய பதிவுகளையும் பார்வையிடுங்கள் Ghibli Style.
[…] பதிவை இட்டுள்ளோம். அதை வாசிக்க இதை IP68 and IP69 What Do These Mobile Ratings Mean? அழுத்தவும். அதே போன்ற ஒரு Technical Term தான் […]
[…] உங்களுக்கு IP68 and IP69 What Do These Mobile Ratings Mean? பற்றி தெரிய வேண்டுமா. Click Here […]
[…] Do You want to read about Ip68 about mobile? so click here. […]