The Best Antivirus Software for 2025
எமது கணணியில் அடிக்கடி ஏற்படும் தலைவலி என்னவென்றால் இந்த Virus பிரச்சனைதான். எப்பவும் எம்மை தொந்தரவு செய்யும் ஒரு ஆபத்தான நச்சு நிரல் கிருமிதான் அது. அது பற்றி இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
இந்த பிரச்சனைகளை இல்லாமல் செய்வதற்கு பல Anti virus Software கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றை நாம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். அவற்றில் சில இலவசமாகக்கிடைக்கின்றது.
Antivirus Software அப்படி சிலவற்றின் பெயர்கள் வருமாறு
Bitdefender Antivirus Plus
Norton Anti Virus Plus
G Data Antivirus
Malwarebytes Premium Security
McAfee Anti Virus
இவற்றுடன் சேர்த்து எமது Micro Soft Operating System இல் ஏற்கனவே Installed பண்ணப்பட்டுள்ளது. அதன் பெயர் Micro soft Defender ஆகும். எமது OS உடன் இது இலவசமாகவே நிறுவப்பட்டு இருக்கும். உண்மையை சொல்லப்போனால் Anti virus Software எல்லாம் Virus பிடிக்குமா என்றால் பிடிக்கும் ஆனால் பிடிக்காது போலத்தன். எதுவாயிருந்தாலும் எப்போதும் OS ஐ Update செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அவை தான் எமது கணணியை பாதுகாக்கும்.
Which is the best Anti virus
அனைவரும் இன்னும் கேட்கும் கேள்வி என்ன வென்றால் எது நல்ல Anti Virus Software என்பதாகும். Actually யாருக்கும் சொல்ல முடியாது இதற்குரிய பதிலை. ஏனென்றால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலைகளுக்கு பொருத்தமானது. சில Software கள் சில Virus களை Arrest பண்ணும் But எதையும் Update பண்ணி வைக்க வேண்டும்.
புதிதாக Virus உருவானால் பழைய Anti Virus Software களுக்கு அது பற்றி தெரியாமல் இருக்கும் இந்த நல்ல நோக்கத்திற்காகத்தான் நாம் Software ஐ Update பண்ண வேண்டும். Virus and Anti Virus இரண்டையும் நாம் Connect பண்ணி விடுவதே இதன் நோக்கமாகும்.
MRT tools in MS Window
MS OS உடன் ஒரு அழகானTools இருக்கின்றது. அது சில வகையான Malicious Virus களை இல்லாதொழிக்க உதவுகின்றது. முதலில் எமது Keyboard உள்ள Win key and R (win + R) ஒன்று சேர அழுத்துங்கள். வரும் Run Windows வில் MRT என செய்யுங்கள்.அப்போது கீழ் வருமாறு Window Open ஆகும்.Open As Administrator .
வரும் Window இல் Next ஐ Click செய்யுங்கள்.இங்கு 3 விதமாக நாம் Scan பண்ணலாம்.
1.Quick Scan
2.Full Scan
3.Customized Scan
இங்கு Full Scan என்பதை Click செய்தால் எமது கணணியை முற்று முழுதாக Scan செய்து ஏதாவது Malicious இருந்தால் அவற்றை நமக்கு காட்டித்தரும்.என்ன இதற்காக சில குறிப்பிட்ட நேரம் செல்லும்.இதுவும் இலவசமான Malicious Software Removal Tool தான். நாம் அடிக்கடி இந்த வேலையை செய்து வந்தால் எமது கணணியும் இப்படியான களிலிருந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்புக்கள் உள்ளது.
The Best Antivirus Software for 2025 பற்றிய பதிவை வாசித்தமைக்கு நன்றி. ✌✌
இன்னும் பல சுவாசியமான முக்கியமான மற்றும் தொழிநுட்பம் சார்ந்த பதிவுகள் வெளிவரும். நன்றி மீண்டும் வருக. 😊😊